திருப்பதி கோவிலின் வரலாற்றின் முதல்முறையாக இப்படி தான் உண்டியல் இனிமேல் எண்ணப் போகிறார்களாம்

Mani
3 years ago
திருப்பதி கோவிலின் வரலாற்றின் முதல்முறையாக இப்படி தான் உண்டியல் இனிமேல் எண்ணப் போகிறார்களாம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலிற்கு தினமும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு சென்று வருகின்றனர் பக்தர்களின் காணிக்கை மூலம் ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையும் ஒரு சில நாட்களில் ஆறு கோடி ரூபாய் வரையும் காணிக்கை பெறப்படுகிறது பக்தர்களின் காணிக்கையாக செலுத்தப்படும் பணம் ஆபரணங்கள் ஆகியவற்றை கோவிலுக்கு உள்ளே கணக்கிட்டு பணத்தை வங்கிகளில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்தி வருகின்றது காணிக்கையாக கிடைக்கும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருப்பதிலுள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பாதுகாப்பிற்காக எடுத்துச்சென்று அவற்றை பத்திரப்படுத்தி வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் இடவசதி இன்மை போன்ற காரணங்களால் காணிக்கையாக கிடைக்கும் பணம் ஆபரணங்கள் போன்றவற்றை கோவிலுக்கு வெளியே கணக்கிட தேவஸ்தான நிர்வாகம் ஓராண்டிற்கு முன்பு முடிவு செய்தது,இந்நிலையில் 23 கோடி செலவில் ஏழுமலையான் கோவிலுக்கு வெளியே அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய காணிக்கை பணம் கணக்கிடும் வளாகம் கட்டப்பட்டது அந்த வளாகத்தை முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி கடந்த பிரமோற்சவத்தின் போது திறந்து வைத்தார்.

இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் காணிக்கையாக கிடைக்கும் பணத்தை கோவிலில் இருந்து மொத்தமாக வெளியே கொண்டு வந்து புதிதாக கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள வளாகத்தில் கணக்கிட தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது, காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் பார்வையிடும் வகையில் வளாகத்தில் கண்ணாடி சுவர் பொருத்தப்பட்டுள்ளன மேலும் பாதுகாப்பிற்காக அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4