கருத்து முரண்பாடு: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

#SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Power #power cuts
Mayoorikka
1 year ago
கருத்து முரண்பாடு: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளனர்.

மொஹான் சமரநாயக்க மற்றும் பீ.கே.யு.ஏ.விக்கிரமசிங்க ஆகியோரே இவ்வாறு இராஜிநாமா செய்துள்ளனர்.

இவ்விருவரும் தமது இராஜிநாமா கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் குறித்த இரு உறுப்பினர்களுக்குமிடையில் மின்துண்டிப்பு தொடர்பில் அண்மையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

இது தொடர்பில் மொஹான் சமரநாயக்க மற்றும் பீ.கே.யு.ஏ.விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு மின்துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு இவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்தோடு மின் துண்டிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்சாரசபைக்கு அனுமதி வழங்கப்படவுமில்லை.

இவ்விவகாரத்திலும் , மின்கட்டண அதிகரிப்பு விவகாரத்திலும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களுக்குமிடையில் தொடர்ந்தும் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் , அவர்கள் பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!