கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கசிப்பு போத்தல்களுடன் கைது

Nila
3 years ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கசிப்பு  போத்தல்களுடன் கைது

 போயா  தினத்தன்று வீட்டில் கசிப்பு விற்றுக்கொண்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் 20 போத்தல்களுடன் கசிப்பு கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புலத்சிங்கள, கோவின்ன, பஹல நாரகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு காலத்தில் புலத்சிங்கல மற்றும் மஹரகம வைத்தியசாலைகளில் சிற்றூழியராக கடமையாற்றி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

54 வயதுடைய குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதுடன் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னரும் பல குற்றங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மிகவும் திட்டமிட்டு கவனமாக கசிப்பூ விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.

விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புப் பொதிகள் வீட்டின் சுடுநீர் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள பெரிய பீப்பாய்க்குள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4