கர்நாடகா விடுதியில் விபரீதம்; 137 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
கர்நாடக மாநிலத்தில் மங்களூருவில் உணவகத்தில் உணவு சாப்பிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், மங்களூரு, சக்தி நகர் என்ற ஒரு பகுதியில் விடுதி ஒன்று இருந்தது. நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் படிக்கும் கல்லூரி மாணவர்கள் திங்கள் அன்று இரவு உணவு சாப்பிட நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உணவகத்திற்கு சென்றனர். இரவு உணவு உண்ட பிறகு அனைவரும் ஒரே நேரத்தில் உடல்நிலை மயக்கம் வாந்தி ஏற்பட்ட மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை அன்று போலீசார் இது குறித்து விடுதியில் உணவு உணவின் தரம் சரியில்லாமல் இருப்பதே மாணவர்களின் உடல் பாதிப்பை ஏற்படுத்தியது என விசாரணைக்கு வருவதை அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார் கமிஷனர் சஷி குமார் உணவை உண்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் நகர முழுவதும் பல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உணவகத்தில் உணவு உண்டதால் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளனர் என தெரியவந்துள்ளது . உணவை உண்ட மாணவர்கள் திங்கள் கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவில் பயன்படுத்திய நீரில் பிரச்சனை இருப்பதாகவும் மாணவர்களின் சில நிலை மோசமாக உள்ளதாக கமிஷ்னர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருப்பதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் ஆபத்தான நிலையை மாணவர்கள் கடந்து விட்டனர். எனவே யாரும் பயப்பட தேவை இல்லை.
இந்த சம்பவம் குறித்து விடுதி காண்காணிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று உரிய விசாரணை செய்யப்படும்.