வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுப்பு தாமதம்; அதிக கட்டணம் செலுத்தும் மக்கள்
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2022 செப்டம்பர் 10 முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது . இதில் மின் பயன்பாட்டு குறித்த தேதியின் கணக்கெடுக்குமாறு ஊழியர்கள் மின்வாரியம் உத்தரவிட்டது.
சென்னை: வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுக்க ஊழியர்கள் தாமதமாக செல்வதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாக்கியுள்ளது.
ஆனால் வழக்கம்போல் ஊழியர்கள் தாமதமாக செல்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும் 100 யூனிட் இலவசம் ,5 யூனிட் வரையிலும் மானிய சலுகை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
நேரில் செல்லாமல் முந்தைய மின் பயன்பாட்டை ஒப்பிட்டுப் பார்த்து இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் குறைந்த கணக்கெடுப்பது போன்ற தவறுகளை நடைபெற்று வருகிறது.
மின்வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள் தினமும் தலா இரண்டு பிரிவு அலுவலகத்திற்கு ஆய்வுக்கும் சென்று மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எடுக்கின்றனர்.
இதனால்தான் அதிகாரிகள் வருகைக்கு பயந்து அனைத்து ஊழியர்களும் சரியாக தேதியில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பர். இதனால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாததுடன் மின்வாரியத்திற்கும் இழப்பு ஏற்படாது.