நான் பிரபலமாக இருக்க வரவில்லை: புதிய வரிக் கொள்கை அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவு! ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Parliament #economy #Ranil wickremesinghe #taxes #Lanka4 #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
நான் பிரபலமாக இருக்க  வரவில்லை: புதிய வரிக் கொள்கை அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவு! ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் வெகு விமர்சையாக தொடங்கியது.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு முடிவடையும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

அதன்படி தற்போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பித்து வருகின்றார். அந்த அறிக்கையில்,

இதில் நான் பிரபலமாக இருக்க இங்கு வரவில்லை. இந்த தேசம் வீழ்ச்சியடைந்துள்ள நெருக்கடியில் இருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன். 

தேசத்தின் நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.  இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்த முடிவுகளின் முக்கியத்துவத்தை உணருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சம்பிரதாயபூர்வ ஆரம்ப பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

 நாட்டை விட்டு வெளியேறாமல் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புவது எமது நாட்டின் எதிர்கால சந்ததி சிறுவர்களும் இளைஞர்களுமே எனவே, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!