வடக்கில் காணி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு: ஜனாதிபதி பாராளுமனறத்தில் உறுதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #Tamilnews #sri lanka tamil news #NorthernProvince #Jaffna #land #Lanka4
Mayoorikka
1 year ago
வடக்கில் காணி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு: ஜனாதிபதி பாராளுமனறத்தில் உறுதி

வடக்கில் காணி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துக்களாற்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.   

வடக்கில்  அண்மையில் 108 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.  மீதி காணிகளும் துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். 

தானும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் ஒன்றாகவே பாராளுமன்றத்துக்கு தெரிவானதாகவும். இனங்களுக்கு இடையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தங்கள் இருவரது கனவாக இருந்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு நல்கவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மத்திய அரசாங்கத்தின் சில நடைமுறைகள் காரணமாக கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, மாகாண சபைகளின் அதிகாரங்களை அமுல்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டு வர எண்ணியுள்ளோம்.  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!