ஒன்பது மாத குழந்தையை பலியெடுத்த முச்சக்கர வண்டி!

#SriLanka #Accident #baby #மருத்துவர்கள் #Hospital #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Mayoorikka
3 years ago
ஒன்பது மாத குழந்தையை பலியெடுத்த முச்சக்கர வண்டி!

குருநாகல் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம் பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி  உள்ளிட்ட ஐவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 9 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4