வீதி விபத்துக்களை குறைக்க விசேட வேலைத்திட்டம்

#Road #Accident #SriLanka #Colombo #sri lanka tamil news #Lanka4 #Tamilnews #TamilCinema
Prabha Praneetha
3 years ago
வீதி விபத்துக்களை குறைக்க விசேட வேலைத்திட்டம்

வீதி விபத்துக்களை குறைப்பதற்காக, இலங்கை போக்குவரத்து சபையால், விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் 15 ஆம் திகதியில் அமையும், சர்வதேச நுகர்வோர் தினத்துக்கு சமாந்தரமாக, இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சாரதிகளைப் பயிற்றுவித்தல், வீதிப் போக்குவரத்து அதிகாரிகளை நியமித்தல், மிகவும் அவதானத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை மதிப்பீடு செய்தல் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையேடுகளை விநியோகித்தல் முதலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4