கிளிநொச்சி நகர வளர்ச்சியில் புதிய திருப்பம்!

#SriLanka #Kilinochchi #Road #LANKA4 #City #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
கிளிநொச்சி நகர வளர்ச்சியில் புதிய திருப்பம்!

கிளிநொச்சியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட திருநகர் மற்றும் கண்ணன் கோவில் வீதிகளை ரூ.236 மில்லியன் செலவில் நவீன இருவழிச் சாலைகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வீதிகள் A9 பிரதான வீதியிலிருந்து மாவட்ட செயலகத்தை மையமாகக் கொண்ட புதிய நகர விரிவாக்கத்திற்கான முக்கிய இணைப்பாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பதுடன், புதிய குடியிருப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குரார்ப்பண நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4