'குட் நைட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

#Cinema #TamilCinema #Tamilnews #Tamil Nadu
Mani
3 years ago
'குட் நைட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மணிகண்டன் நடிக்கும்' குட் நைட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்ட' குட் நைட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக். 'ஜெய் பீம் 'நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத்,தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் . அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'.


 இதில் ' ஜெய் பீம் ' மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். 51 இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், "குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம். படம் குழுவினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4