சுவிட்சர்லாந்தில் இலாபமாக வீடு, காணி வாங்கும் முன்னர் இதை கவனியுங்கள்.
சுவிட்சர்லாந்தில் (சுவிற்சர்லாந்து, சுவிஸ்) புதிதாகவோ, கட்டிய வீட்டையோ வாங்குவதென்பது மிக எளிதான விடயம் அல்ல.
பலர் சுவிட்சர்லாந்தில் (அண்ணளவாக 29% தமிழ் மக்கள்) சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களே. இதில் அண்ணளவாக 10% இரண்டாவது வீடோ அல்லது மாடிக்கட்டிடங்களோ வைத்திருப்பவர்கள்.
இவர்கள் வீடு வாங்கும்பொழுது 20% - 25% முற்கட்டணமும் 75% - 80% வீட்டுக்கடனும் பெற்றவர்கள் ஆவர். இருந்தும் அவரவர் வாங்கிய வீடுகளின் பெறுமதியை இப்பொழுது கணித்தால் கட்டிய முதலைவிட பல மடங்குகள் அதிகமாக காணப்படுகிறது.
இதற்க்கு பல காரணங்கள் உண்டு.
- அவர்கள் வீடு வாங்கும்பொழுது தெரிவுசெய்த இடம்.
- வாங்கிய வீட்டின் தரம்.
- வீடு வாங்கும் பொழுது மேலும் வீடோ கட்டிடமோ கட்டக்கூடிய காணிகளோடு வாங்கியமை.
- இடத்தை சுற்றி வரப்போகும் மக்களின் தொகை (குடியிருப்பு) அதிகரிப்பு.
- வாங்கிய வீட்டை ஏதாவது காரணத்தால் விற்க வேண்டுமானால் சுவிட்சர்லாந்தில் வாழும் அனைத்து நாட்டவர்களும்கும் விற்ககூடியவாறு தேர்வு செய்தது.
- வாங்கும் வீட்டை கட்டிய நிறுவனம் தரமான நிறுவனமா? தரமான தளபாடங்களை போட்டு கட்டியுள்ளார்களா? என்பதை பார்த்து வாங்கியது.
ஆம். ஒரு நல்ல வீடு வாங்குவதென்றால் வெறும் முற்பணமோ அல்லது வாங்கும் தகமையோ இருந்தால் மட்டும் போதாது. சிறிய செலவு ஆனாலும் இப்படியான தூர நோக்குடன் அனுபவம் வாய்ந்தவரின் ஊடாக வீட்டை வாங்கி பயனடையுங்கள்.
இதுவரை சுவிஸ் நாட்டில் சரியான ஆலோசனையின் கீழ் வீடு வாங்கி நட்டம் அடைந்தவர்கள் இல்லை என்றே கூறலாம்.