இலங்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டிற்கு பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை வரவேற்பு

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Investment #Tamil #Tamilnews #D K Modi #India
Prabha Praneetha
3 years ago
இலங்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டிற்கு பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை வரவேற்பு

இலங்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டிற்கு பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அண்ணாமலை, இதற்கு முன் உலகின் எந்தத் தலைவர்களும் செல்லாத தூரத்தை மோடி இலங்கைக்குள் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் வரலாற்று சிறப்பு மிக்கவையாகும்;.
இலங்கைத் தமிழர்களின் காயங்கள் மெல்ல மெல்ல ஆறி வருகின்றன. 

வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன அல்லது முடியும் தறுவாயில் உள்ளன என்று அண்ணாமலை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மோடியின் இலங்கைப் பயணம், முந்தைய இந்திய அரசாங்கத்தின் திறமையின்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை உறுதிப்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 2015 முதல் இலங்கையில் இந்தியா மேற்கொண்ட சில திட்டங்களையும் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார்.

வடமாகாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் காரைக்காலுக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், கப்பல் சேவைக்கான கேள்வி மனுக்கோரல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் கடிதம் மூலமும், உணர்வுபூர்வமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான புதிய செய்திகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால் வடமாகாண மக்கள் பெருமளவில் பயனடைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மோடியின் நடவடிக்கைகளின் விளைவே, இந்தப் பகுதியில் சீனாவின் செல்வாக்கு தணிந்திருப்பதற்கான காரணம் என்றும் பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4