காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!
#SriLanka
#Protest
#Kilinochchi
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான தீச்சட்டி போராட்டம், காளி கோவிலில் நிறைவடைந்தது.
இதேவேளை, போராட்டத்தின் போது அதனை குழப்பும் வகையில் ஒருவர் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே