சிம்ரனுடன் தொடர் 4 படங்களில் நடித்த பிரபல நடிகர்.

#Cinema #TamilCinema #Actress #Lanka4
Kanimoli
3 years ago
சிம்ரனுடன் தொடர் 4 படங்களில் நடித்த பிரபல நடிகர்.

நடிகை சிம்ரன் நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளிலேயே தனது நடிப்பு, நடனம், அழகு உள்ளிட்ட திறமையால் ரசிகர்களை கவர்ந்து கனவுக்கன்னியாக தற்போது வரை பலரது மனதில் வலம் வருபவர். சிம்ரன் கமலஹாசனுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகையாக இருந்த போதிலும், சாக்லேட் பாய் நடிகரான பிரஷாந்துடன் 4 படங்களில் நடித்தார். அப்படி இவர்கள் நடிப்பில் வெளியான 4 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கண்ணெதிரே தோன்றினாள்: 1998 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன், பிரஷாந்த் ஜோடி முதன்முதலாக இணைந்த படம். தேவா இசையில் வெளியான இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஹிட்டான நிலையில், காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் ஹிட்டானது.

ஜோடி : 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில், சிம்ரன், பிரசாந்த் ஜோடி பெருமளவில் பேசப்பட்டது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான, இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் வரவேற்கப்பட்டது. இப்படம் சிம்ரன் மற்றும் பிரசாந்தின் கேரியருக்கு முக்கிய படமாக அமைந்தது.

பார்த்தேன் ரசித்தேன் : இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன், லைலா, பிரஷாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருப்பர். ஒருதலையாக காதலிக்கும் சிம்ரனின் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டது. இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் வெளியான இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

தமிழ் : 2002 ஆம் ஆண்டு நடிகர் பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான தமிழ் படம் தான் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த கடைசி படமாகும். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாசர், வடிவேலு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இப்படத்தின் வெற்றியையடுத்து பெங்காலி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4