இன்றைய வேத வசனம் 15.02.2023: அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 15.02.2023: அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்

வாழ்க்கை வாழ்வதற்கே என்பார்கள்! உண்மைதான்!
கண்ணைப் பறிக்கும்! காதிற்கு இனிப்பாகும்! வாய்க்கு ருசியாகும், மனதிற்கு இன்பமூட்டும் அத்தனையும் செய்வதே வாழ்க்கை என்ற விளக்கமும் கொடுப்பார்கள்! இதில் தான் பிசகுகிறார்கள்!

கண்ணை பறிப்பது உன் வாழ்வையே அழித்துவிடும்! காதுக்கு இனிமையானவைகள் உன் வாழ்க்கையை கசப்பாக்கும்! வாய்க்கு ருசி என்பது உடலையே புசித்து விடும்! மனதிற்கு இன்பம் என்பது துன்பத்தில் முற்றுப்பெறும் என்பதை பின்னரே அறிகிறார்கள்!

பன்றிகள் மேய்க்கிறேனே, நன்றியில்லாம் நண்பர்கள் என்னையே தின்றுவிட்டார்களே, நான் பன்றிகளின் உணவைத் தின்கிறேனே என்று பின்னர் உணர்கிறார்கள்.

கூப்பிட்டால் எத்தனை வேலையாட்கள் ஓடி வருவார்கள். எங்கு எட்டிப் பார்த்தாலும் எனக்கு உதவ ஒருவரும் இல்லையே, உடைகள் அழுக்கு கண்டதில்லையே இப்பொழுது கிழிந்து தொங்குகின்றதே!

கண்கள் கலங்கியது இல்லையே, இப்பொழுது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லையே! கண்ணை பறிகொடுத்தவைகளுக்குப் பின் சென்றேனே, கண்ணீர் விடுகிறேனே!

காதிற்கு இனிமையானவைகளைக் கேட்டு ஓடினேன் இப்பொழுது கம்பு ஒன்றாமல் நடக்க முடியவில்லையே. வாய்க்கு ருசியானவைகளை கொடுத்து வாங்கினேனே, இப்பொழுது பன்றிகளின் உணவை பசியற்ற வாய்க்குள் திணிக்கிறேனே! 

என்பதே வழி தப்பி தீய வழியில் சென்ற இளைய மகனின் இதய ஓலம்!!!
அவ்வளவு தான் மனிதன்!!

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற அவன் ஏன் பிறந்தேன் என்பான். துள்ளி ஓடினவன் பத்தடி நடப்பதற்கு 10 நிமிடங்கள் எடுப்பான்.

பின்னர் தன்மேல் வெறுப்படைந்த தன்னையே வெறுப்பான்!!
இன்றும் தேவ கற்பனைகளை மறந்து, தேவ கட்டளைகளை மறுதலித்து தீய வழியில் துணிகரமாக செல்லும் நமக்கும் கடைசியில் இதே நிலைதான் என்பதை மறந்து விட வேண்டாம்!! 

#சங்கீதம் 7:11-14
11. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
13. அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
14. இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
ஆமென்!! அல்லேலூயா!!!