ரஷ்ய பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்த மரினா யாங்கினா உயிரிழப்பு

#Ukraine #Russia #War #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
ரஷ்ய பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்த மரினா யாங்கினா உயிரிழப்பு

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். 

போர் நடக்கும் வேளையில் ரஷ்ய அதிபர் புதினால்பதவி நீக்கம் செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் மகரோவ் சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். 

அதேபோல் பல முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்த மரினா யாங்கினா செயின்ட் பீட்டர் பார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 

இவரது உடலை குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இந்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மெரீனாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4