சிவராத்திரி இரவு 12 மிளகு இருந்தால் நம் கர்ம வினை தீர்க்கலாம்!

#God #Hindu #spiritual #Tamilnews
Mani
1 year ago
சிவராத்திரி இரவு 12 மிளகு இருந்தால் நம் கர்ம வினை தீர்க்கலாம்!

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதம் ஆகும்,  மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதில் ஐந்து வகையான விரதங்களை உள்ளடக்கியது மகா சிவராத்திரி நித்திய, மாத, பட்ச, யோக, மகா.

சிவராத்திரியில் மிளகை வைத்து செய்யப்படும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டால் நம் வாழ்வில் சேர்ந்த கர்ம வினைகளை அனைத்தையும் தீர்த்துவிடும் என்று சொல்லப்படுகிறது அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் கீழ் நாம் காணலாம். நாம் சிவனிடம் சரண் அடைந்தால் போதும் நம் பாவங்களை நீக்கி அருள் புரிபவர் எல்லாம் வல்ல சிவபெருமான்.

நம் வாழ்வில் இல்லை என்ற நிலை இல்லாமல் வாழ வைப்பவர் என்பது நித்தமும் சிவனை நெஞ்சில் நினைப்பவருக்கும் புரியும். கர்மா என்பது நமக்கு கூடுதல் பிரச்சனைகளை கொடுத்து நம் வாழ்வில் முன்னேற்றம் அடையாத அளவு தொடரும்,  இந்த கர்ம வினைகளை நம்மை மட்டும் அன்றி நம் சந்ததியினருக்கும் கூட துன்பத்தை விளைவிக்கும், இந்த கர்ம வினைகளை நம்மிலிருந்து வெளியேற்ற நம் கடைபிடிக்க வேண்டியது சிவராத்திரி மட்டும் போதும். 

பிரதோஷம் என்பது சிவனுக்கு மிகவும் உகந்த நாள் அதில் சனி பிரதோஷம் என்பது ஐந்து வருட பிரதோஷ விரதம் இருந்து கோவில் சென்று வழிபட்டதற்கான பலனை அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு தினமாக கருதப்படும். அத்தகைய இத்திருநாளில் சிவராத்திரியும் இணைந்து வந்திருப்பது நம் பாவங்களை அனைத்தையும் போக்கி புண்ணிய நிலை அடைவதற்கான நமக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

இந்நன்னாளில் சிவனை நினைத்து விரதம் இருப்பது மிக மிக உகந்தது இன்றைய தினம் விரதம் இருப்பதுடன் சிவா ஆலயங்களுக்கு சென்று அவரின் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு செய்வது சிவபெருமானின் பரிபூரண அருளை பெற்று தரும்.

 

நம் கர்ம வினை போக்க பரிகாரம் இன்று காலை முதல் இரவு வரை உள்ள அனைத்து கால பூஜைகளும் முடித்து பிறகு இரவு முழுவதும் கோயிலில் கண்விழிப்பவர்கள் அதிகம் அப்படி கண் விழிக்கும் வேளையில் கையில் இருந்த 12 மிளகாய் வைத்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மிளகு எடுத்து உண்டு தண்ணீர் அருந்த வேண்டும் இப்படி செய்யும் போது என்னுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி என்னுடைய உள்ளம் தூய்மை அடைந்து நல்ல ஒரு முத்தி நிலையை தர வேண்டும் என வேண்டிக்கொண்டு ஒவ்வொரு மிளகையும் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றாக நாம் உட்கொள்ள வேண்டும். விரதம் இருக்கும்போது இதை சாப்பிடலாமா என்று கேள்வி இருக்கும் விரதம் இருப்பவர்கள் தாராளமாக இதை சாப்பிடலாம் அல்லது விரதம் இல்லாமல் கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் இருப்பவர்களும் வீட்டில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து பிறகு இந்த மிளகை பரிகாரத்தை செய்யலாம். 
 


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!