இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்டில் போட்டியில் மீண்டும் இணையும் மிட்செல் ஸ்டார்க்

#Australia #India Cricket #2023 #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்டில் போட்டியில் மீண்டும் இணையும் மிட்செல் ஸ்டார்க்

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. 

2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. 

3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார். 

டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைய உள்ளார். 

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் ஸ்டார்கின் சுவிங் பவுலிங்கில் திணறி ஆட்டம் இழந்திருக்கிறார்கள். 

இந்தியாவின் சமதளமான பிட்சில் அவரால் எளிதாக ரிவர்ஸ் சுவிங் போட்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தியா இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4