குலசை தேன்குழல் மிட்டாய்: செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
1 cup புழுங்கல் அரிசி
¼ cup உளுந்தம் பருப்பு
1 வெல்லம்
1 cup தண்ணீர்
பொரிக்க எண்ணெய்
உப்பு சிறிதளவு
செய்முறை:
தேன்குழல் செய்ய முதலில் புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஊறிய அரிசி,உளுந்தம் பருப்பை கிரைண்டரில் நன்றாக காட்டிக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
அதன் பின் வெல்லத்தை நன்கு தட்டி எடுத்து அதை சிறு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு சொட்டு பாகை அதில் ஊற்ற வேண்டும்.
பாகு தண்ணீரில் கரையாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாகுபு தயாராக உள்ளது என்று அர்த்தம்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி முறுக்கு பிழியும் அச்சில் அரிசி உளுந்தம் பருப்பு கலவையை அதில் எடுத்து எண்ணெய் காய்ந்ததும் பிழிய வேண்டும்.
அதனை தேன்குழல் பொரிந்ததும் அதை வெல்லப்பாகில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சுவையான தேன்குழல் ரெடி.