சுவையான முந்திரி கொத்து செஞ்சி பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்! அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!

#Recipe #Preparation #How_to_make #Sweets
Mani
1 year ago
சுவையான முந்திரி கொத்து செஞ்சி பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்! அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!

தேவையான பொருட்கள்:

1 cup பச்சைப்பயிறு
3 tbsp துருவிய தேங்காய்
¾ cup வெல்லம்
¼ tsp ஏலக்காய் தூள்
½ cup அரிசி மாவு
2 tbsp மைதா
½ tsp மஞ்சள் தூள்
3 tbsp நல்எண்ணெய்
தேவையான அளவு உப்பு

செய்முறை:

முந்திரி கொத்து செய்ய முதலில் கடாயில் எண்ணெய் விடாமல் பாசிப்பயறு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பயறு பொன்னிறமாக வந்ததும் அடுப்பை ஆப் செய்து விட வந்ததும் கலவையை ஆற வைக்க வேண்டும். பாசிப்பயறு ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பாசிப்பயறு பொன்னிறமாக வந்ததும் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும்.

பின்னர் கலவையை ஆற வைக்க வேண்டும். பாசிப்பயறு ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பாகு இரு விரல்களில் நடுவே வைக்கும் போது பிசுபிசு விரல்களில் இருக்க வேண்டும்.

அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு,மைதா மாவு, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீர் கலந்து தோசை தூள் பதம் போல் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி உருண்டை பிடித்துள்ள கலவையை அரிசி மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.இப்பொழுது சத்தான முந்திரி கொத்து தயார்.
 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு