கோவை தண்ணீர் மட்டன் குழம்பு செய்வது எப்படி

#Cooking #How_to_make #Recipe
Mani
1 year ago
கோவை தண்ணீர் மட்டன் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

500 kg மட்டன்
20 சின்ன வெங்காயம்
7 பூண்டு
2 கொத்து மிளகாய் வற்றல்
1 பட்டை
3 கிராம்பு
1 tsp மல்லி
½ tsp சீரகம்
½ tsp சோம்பு
½ tsp மிளகு
¼ tsp மஞ்சள் தூள்
2 பெரிய வெங்காயம்
½ tsp கடுகு
3 tbsp நல்எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு

செய்முறை:

தண்ணீர் மட்டன் குழம்பு செய்ய முதலில் மட்டனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் அதில் பட்டை,கிராம்பு சேர்க்க வேண்டும். கொத்தமல்லி, சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதனை' கழுவி வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை சிறிது தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து உப்பு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர்மட்டன் வேக வைத்ததும் அதனை சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் வேக வைத்த மட்டனையும் தண்ணீரையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான கோவை தண்ணீர் மட்டன் குழம்பு தயார்.