போதைப்பொருளுடன் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்த 15 இளைஞர்கள் கைது!
#ARREST
#Police
#drugs
#CourtOrder
#SriLanka
#LANKA4
#sri lanka tamil news
Prathees
3 years ago
போதைப்பொருளுடன் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்த 15 இளைஞர்கள் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, காலி, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹெரோயின், கஞ்சா, கஞ்சா கலந்த சிகரெட்டுகள் மற்றும் பீடிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே