இராப்போசனத்திற்கு காய்கறியில்லாமல் வைக்கும் இக்குருமாவை சமைத்து சுவைத்திடுங்கள்.

#சமையல் #இரவு #உணவு #தகவல் #லங்கா4 #Cooking #dinner #information #today #Lanka4
இராப்போசனத்திற்கு காய்கறியில்லாமல் வைக்கும் இக்குருமாவை சமைத்து சுவைத்திடுங்கள்.

இல்லத்தரசிகளே வேலை விட்டுத்திரும்பி வீட்டுக்கு வந்ததும் இரவுக்கு என்ன செய்யலாம் என்று தலையை கொய்யாமல் இந்த காய்கறி இல்லமால் இப்படி குருமாவை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.

இதனை நீங்கள் சோறு, சப்பாத்தி, இட்லி, தோசை ,  பூரி மற்றும் பாண் உடன் இரவு சப்பாட்டு எந்த உணவுடனும் சேர்த்துச் சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடலெண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன் 
  • பட்டை-1 
  • கிராம்பு -1
  • ஏலக்காய் -1
  • பிரிஞ்சி இலை -2
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • பூண்டு பல்-4
  • கருவேப்பிலை -சிறிதளவு 
  • பெரியவெங்காயம்-3
  • தக்காளி-4
  • உப்பு – தேவையான அளவு 
  • மஞ்சள்தூள் – கால் டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 
  • மல்லித்தூள்–1 ஸ்பூன் 
  • தேங்காய்- அரை முடி 
  • பச்சை மிளகாய்-3
  • பெருஞ்சீரகம்-1 ஸ்பூன் 

படி:1
முதலில் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் மூன்று ஸ்பூன் கடலை எண்ணெயை சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய் போன்றவற்றை கடாயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

படி:2
அடுத்ததாக அதில் நான்கு பல் பூண்டு எடுத்து மசிச்சு கொண்டு அதை கடாயில்  சேர்க்க வேண்டும். அதன்பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கி  முடித்ததும் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

படி:3
இந்த வெங்காயத்தை ஒரு 10 நிமிடம் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் பொன்னிறம் வந்ததும் அதில் நான்கு பெரிய தக்காளியை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி கடாயில் சேர்க்க வேண்டும்.

படி:4
தக்காளியை கொஞ்சம் அரைகுறையாக வதக்க வேண்டும். நன்றாக வதக்க கூடாது. இப்படி வதக்குவதினால் குருமா மிகவும் சுவையாக இருக்கும். வெங்காயம், தக்காளி கொஞ்சம்  வதங்குவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

படி:5
அடுத்ததாக வெங்காயம், தக்காளி வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,  சேர்த்து  நன்றாக வதங்கிய பிறகு மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பிறகு உங்களுக்கு எவ்வளவு குருமா வேண்டுமோ அந்த அளவுக்கு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

படி:6
தண்ணீர் சேர்த்து  பிறகு நன்றாக கலக்கி விட வேண்டும். கடைசியாக இதில் சுவையாக இருக்க ஒரு மசாலா சேர்க்க வேண்டும். அரை மூடி  தேங்காய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.

அரைத்த பிறகு அதை கொதிக்கும் குருமாவில் கலந்து விட வேண்டும்.  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்ததும் இறக்கி பரிமாற வேண்டியது தான். காய்கறியற்ற இக்குருமா உங்களையும் வீட்டாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இதன் சுவை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!