சுவையான நாகூர் வாடா செய்து பாருங்கள்

#Recipe #How_to_make #Preparation #Cooking #Food
Mani
1 year ago
சுவையான நாகூர் வாடா செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்:

1 cup பழைய சோறு
½ cup அரிசி மாவு
10 பிரான்
1 cup ரவை
2 வெங்காயம்
20 கருவேப்பிலை
5 பச்சை மிளகாய்
1 cup துருவியது தேங்காய்
¼ tsp மிளகாய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

நாகூர் வாடா செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பிராணை சிறிது உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் பழைய சோற்றை நன்றாக வடித்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரிசி, ரவை, சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கலவையை சிறிது நேரம் ஊற விட வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயம் வதங்கிய பின்னர் தேங்காய் துருவலை அதில் போட வேண்டும். வெங்காய கலவையை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கலவையை பிளாஸ்டிக் கவரில் உளுந்த வடை போல் தட்டி அதில் உங்களுக்கு தேவையான அளவு பிரானை வைத்து எண்ணெயில் போட்டு அளவு எடுக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்து எடுத்ததும் தனியே எடுத்து வைக்க வேண்டும்.பின்னர் வெங்காய கலவையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.இப்பொழுது சுவையான நாகூர் வாடா தயார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!