மாமிச உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ள எளிதாக சமிக்கும் மாங்காய் ரசம் வைக்கும் முறை.

#சமையல் #பகல் #உணவு #தகவல் #லங்கா4 #Cooking #meal #Recipe #information #Lanka4
மாமிச உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ள எளிதாக சமிக்கும் மாங்காய் ரசம் வைக்கும் முறை.

புதன் கிழமை என்றால் பெரும்பாலானோர் வீட்டில் மாமிச உணவு சமைப்பார்கள். உதாரணமாக மட்டன், சிக்கன் மீன் போன்ற உணவுகளின் விசேஷங்கள் காணப்படும். இவற்றை உண்ணுவது கேடல்லாவிட்டாலும் சமிபாடடையும் தன்மை சிரமமாக இருக்கும். 

இதற்கு மாங்காய் ரசம் செய்து இவற்றுடன் சாப்பிட்டால் சமிபாடடையும் தன்மை இலகுவாக இருக்கும். இன்று இந்த மாங்காய் ரசம் வைக்கும் முறையை இன்று பார்ப்போம்.

தேவையான பாத்திரங்கள்.

  • கடாய் – 1
  • மிக்ஸி – 1
  • குழம்பு பாத்திரம் – 1

தேவையான பொருட்கள்:

மிக்ஸியில் அரைக்க:

  • பெருங்காயம் – சிறிய கட்டி
  • வர மிளகாய் – மூன்று
  • பூண்டு – ஆறு பல்
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  • அடுப்பில் சுட்ட மாங்காய் – 2
  • தண்ணீர் – 2 ½ கிளாஸ்
  • தக்காளி – 2

இரசம் வைக்க:

  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
  • வரமிளகாய் – இரண்டு
  • மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

படி: 1

இரண்டு மாங்காயை எடுத்து அடுப்பில் நன்றாக சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

படி: 2

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில் வர மிளகாய் மூன்று, பூண்டு பல் ஆறு, பெருங்காயம் சிறிய கட்டி, மிளகு ஆகியவற்றை சேர்த்து பல்ஸ் பட்டனை பயன்படுத்து இரண்டு முறை அடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

படி: 3

சுட்ட மாங்காயை எடுத்து தோல் நீக்கிவிட்டு அவற்றில் இருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள், பின் மிக்ஸி ஜாரில் அதனை சேர்த்து ஒருமுறை அடித்துக்கொள்ளுங்கள்.

படி: 4

பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் அரைத்த மாங்காய் விழுது, பொடி செய்த மிளகு சீரகம், மஞ்சள் தூள் மற்றும் 2 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.

படி: 5

பிறகு அதனுடன் உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இறுதியாக இரண்டு தக்காளி பழத்தை இதனுடன் பிழிந்துவிடவும்.

படி: 6

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றவும்.

படி: 7

எண்ணெய் சூடானதும் கடுகை சேர்க்கவும், கடுகு பொரிந்து வந்ததும் வரமிளகாய் இரண்டு செய்து வதக்கவும் பின் கலந்து வைத்துள்ள ரசம் கலவையை இவற்றில் சேர்க்க வேண்டும்.

படி: 8

ரசம் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்  ஆம் அவ்வளவு தான் சுவையான மாங்காய் ரசம் வைத்துவிட்டோம். இதனை மாமிச உணவுடன் கலந்து உட்கொள்ள எளிதான சமிபாடு நடைபெறும்.