குழந்தைகளுக்கான கத்தரிக்காய், முட்டை சேர்த்த ஊட்டச்சத்துமிக்க ஒரு சுவையான இந்த டிஷ்ஐ செய்து கொடுங்கள்.
இன்றைய சமையல் குறிப்பில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதும், அதிகம் ஊட்டச்சத்துள்ளதுமான முட்டை மற்றும் கத்தரிக்காய் கொண்டு சமைக்கும் ஒரு டிஷ்ஜ எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- முட்டை – 2
- கத்தரிக்காய் – 2
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய்தூள் – 3/4 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
- கேரட் – 1
- வெங்காயம் – 1
- கொத்தமல்லியிலை – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – 3/4 டீஸ்பூன்
செய்முறை
படி – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கத்திரிக்காயை நன்கு தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்துவிட்டு. பின்னர் அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளல் வேண்டும்.
படி - 2
பிறகு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துகொள்ளுங்கள்.
படி – 3
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்துள்ள 2 முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுதல் வேண்டும்
படி – 4
பின்னர் இதனுடன் 1 கேரட், 1 வெங்காயம் மற்றும் தேவையான அளவு கொத்தமல்லியிலை ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
படி – 5
அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி பின்னர் அதில் நாம் முன்னரே தயார் செய்து வைத்திருந்த கத்திரிக்காய்களை சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி நன்கு வேகவைத்துக் கொள்ளுதல் அவசியம்.
படி– 6
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருந்த முட்டையை ஊற்றி முன்னும் பின்னும் பிரட்டி வேகவைத்துக் கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் அப்படியேயும் பரிமாறலாம் அப்படியில்லையென்றால் சப்பாத்தின் நடுவில் வைத்து ரோல் செய்தும் உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறலாம். தேவைப்படின் பாண் துண்டுகளுடன் தொட்டு உண்ணலாம்.
இதனை இன்று செய்து பாருங்கள் மீண்டும் குழந்தைகள் அதனை செய்து தருமாறு அடம்பிடிக்கிறார்களோ இல்லையோ என்று பாருங்களேன்.