சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1 cup ஓட்ஸ்
4 முட்டையின் வெள்ளைக்கரு
1 tsp மிளகுத் தூள்
½ cup பால்
tbsp ஆலிவ் ஆயில்
1 tsp உலர்ந்த கற்பூரவள்ளி
tbsp துருவிய சீஸ்
5 tsp கொத்தமல்லி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்ய முதலில் கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெது வெதுப்பாக சூடேற்றி மிதமான தீயில் வெது வெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும்.
பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும்,
அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்ற வேண்டும்.
அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்த மல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி.