ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.

#India Cricket #Australia #Test
Mani
3 years ago
ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். லாபுசாக்னே 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஸ்மித் 38 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்களும் எடுத்தனர். அடுத்து, கேமரூன் கிரீன் களமிறங்கினார்.மறுபுறம், உஸ்மான் கவாஜா தனது நிதானத்தை வெளிப்படுத்தி அசத்தலாக 14வது சதம் அடித்தார். அவர் 251 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். கிரீன் 64 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும், அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டாவது நாளிலும் ஆட்டம் தொடரும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4