ஆட்டு நுரையீரல் வறுவல் செய்வது எப்படி?
#Cooking
#Preparation
#How_to_make
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
1 நுரையீரல்
1 tsp மிளகாய்தூள்
1 tbsp இஞ்சி பூண்டு விழுது
½ tsp மஞ்சள்தூள்
1 tsp கடுகு
1 tsp மசாலாத்தூள்
11 கறிவேப்பிலை
1 வெங்காயம்
3 பச்சை மிளகாய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
3 tbsp நல்எண்ணெய்
செய்முறை:
நுரையீரல் பொரியல் செய்ய முதலில் நுரையீரலை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.கடாயில் நுரையீரலை போட்டு கரம் மசாலாத்தூள், உப்பு போட்டு 2 குவளை தண்ணீர் ஊற்றி போட்டு வேகவிடவும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு பொரிய விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு பொரிய வேகவைத்த நுரையீரலை போட்டு நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான நுரையீரல் பொரியல் ரெடி.