கொத்தமல்லி வடைஇப்படி செஞ்சி பாருங்க!
தேவையான பொருட்கள்:
1 cup கொத்தமல்லி இலை
½ cup கோதுமை மாவு
1 tbsp அரிசி மாவு
1 tbsp கடலை மாவு
1 tsp மிளகாய்த்தூள்
1 tsp மஞ்சள் தூள்
1 tsp இஞ்சி பூண்டு விழுது
4 பச்சை மிளகாய்
1 tsp சீரகத்தூள்
1 tsp மல்லித்தூள்
3 tbsp நல்எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
கொத்தமல்லி இலை வடை செய்ய முதலில் கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீரை நன்றாக வடிகட்டி கொத்தமல்லி வேண்டும்.பின்னர் தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு, கோதுமை மாவு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள உப்பு கொத்தமல்லி இலையை சேர்க்க வேண்டும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லி வேக வைப்பது போல் ஒரு தட்டில் எண்ணெய் தடவி கொத்தமல்லி இலை கலவையை போட்டு சிறிது நேரம் வேக கலவையை வேண்டும்
கடாயில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த கொத்தமல்லி இலை கலவையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.இப்பொழுது சுவையான கொத்தமல்லி வடை தயார்.