தவறென அவரளந்த பொய்கள் மாறும் பார். எல்லாம் சரிவர இஃது செய்து விட்டால் இங்கே  நான் கடவுள் என நிலை மாறிப் போவேனா சொல்? இன்றைய கவிதை 14-03-2023.

#கவிதை #கடவுள் #வணங்குதல் #ஏழை #லங்கா4 #Poems #God #worship #poor man #Lanka4
தவறென அவரளந்த பொய்கள் மாறும் பார். எல்லாம் சரிவர இஃது செய்து விட்டால் இங்கே  நான் கடவுள் என நிலை மாறிப் போவேனா சொல்? இன்றைய கவிதை 14-03-2023.

தவறென அவரளந்த
பொய்கள் மாறும் பார்.
*************************************

எல்லாம் சரிவர இஃது
செய்து விட்டால் இங்கே 
நான் கடவுள் என நிலை
மாறிப் போவேனா சொல்?

இல்லை நின்று பார்.
கடவுள் கூட 
தவறியது உண்டு.
கண்டதுண்டா நீ?

ஆம்.நிச்சயாமாக.
படைப்பு ஒழுங்கில்
தவறு நடந்தால் அஃது
யார் விட்டு தவறு?

இன்பம் ஒன்று
இருக்கும் போது
துன்பம் என்பது
எப்படி வந்தது?

அஃது இறைவன்
செயல் எனின்
பிறகெதற்கு நாம்
ஏழைக்கு இரங்க?

படைத்தவன் இங்கே 
கைபிடி உணவிட
விருப்பது சாகும்
ஏழைகள் பலருண்டு.

இரங்கிடல் நல்லது
நல்லியல்பு என்றால்
கடவுளிடம் இல்லையோ
இந்த இயல்பு சொல்.

பிழையின்றி பழி 
சுமந்து மரித்தவரும்
பிழை வழி சென்று 
பிழைத்து வாழ்ந்தவரும்

உழைத்து பிழைத்து 
வாழும் போது இஃது
கொள்ளை இட்டு பலர்
நலம் வாழ்வதும் உண்டு.

மனிதர் பலரின் மனதில்
இரக்கம் பேசும் போது
இறைவன் எங்கே போனான்
இந்த துயரைக் காணாது

எல்லாம் அவன் செயல்
உரைப்பது சரியென
மனதில் கொண்டால் 
இப்படி வருகிறது கேள்வி.

கேட்டால் எனை இங்கே 
தூற்றும் உலகில் தான் 
உணர்ந்து கொஞ்சம் நீ 
பார்த்தால்  புரியும் உனக்கும்.

பாம்புக்கு வாலும் அஃது 
மீனுக்கு தலையும் பலர் 
காட்டி வாழும் இந்த
வாழ்வில் எங்கே நீதி?

அவரவர் செயல்
அவர் நன்மை தேடி
நடப்பதால் தான்
துணைக்கு தேடுவார்.

தேவைக்கு இறை
பெயரில் சொல்லியதை
நம்பி நாம் வாழ்ந்து
போலிக்கு ஏமாறவோ?

உன்னை மீஞ்சிய 
செயல் ஒன்றுக்கு
வழிகள் இல்லை.
பொய் என நீ தேடு.

ஒருநாள் உனக்கிங்கே
வழி பிறக்கும் பார்.
இறை போல வாழும்
நிலை வந்து சேரும்.

தவறு விட்டதாக அவர்
அளந்த கதைகள்
மாறிப்போகும் பார்.
இயற்கை நீதி வழி.

சுயநலம் தம் வாழ்வுக்கு
கடவுள் பெயரில் நீதி
எழுதிச் சொல்லி வைத்து
நலம் நாம் வாழ்தல் சரியோ?

அவர் வாழ வழி தனை
இறை வழங்கி போனால்
அவன் படைப்பில் தானே 
நாமும் இங்கே தோன்றினோம்.

                                                                                                           ........ அன்புடன் நதுநசி.