யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் அங்கு கடமை புரியும் யுவதியும் தற்கொலை

#Death #Jaffna #Gold #Police #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் அங்கு கடமை புரியும் யுவதியும் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைமாடம் ஒன்றின் உரிமையாளரும், அந்த நகைமாடத்தில் பணிபுரியும் பெண்ணும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வர்த்தக நிறுவனத்தில் கடமை புரியும் 21 வயது யுவதி இன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். நாவாந்துறையில் உள்ள அவரது இல்லத்திலேயே அவர் இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் இன்று பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கொட்டடியில் உள்ள அவரது இல்லத்திலேயே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4