இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம்

#Ranil wickremesinghe #SriLanka #Sri Lanka President #Lanka4
Kanimoli
3 years ago
இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம்

இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர், வர்த்தக கடன் வழங்குநர் அல்லது கடன் வழங்குநர் குழுவுடன் கடன் உடன்படிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட மாட்டாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4