வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஜோ பைடன்

#America #Bank #Finance #President #Biden #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஜோ பைடன்

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன இந்த நிலையில்,இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவை பொறுத்தவரை அதன் வங்கிகள் பாதுகாப்பாகவே உள்ளன. எனினும் பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் வரும் நாட்களில் நிச்சயம் மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளால் இனி இந்த நிலை ஏற்படாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் "வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன...என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா... இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா?" எனக் கேள்வியெழுப்பினார். 

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4