கமகமக்கும் மீன் மிளகு மசாலா செஞ்சி பாருங்க

#Cooking #How_to_make #Recipe
Mani
1 year ago
கமகமக்கும் மீன் மிளகு மசாலா செஞ்சி பாருங்க

தேவையான பொருட்கள்:

½ கிலோ வறுக்கக்கூடிய மீன் 
200 கிராம் வெங்காயம் நறுக்கியது 
4 பச்சை மிளகாய் கீறியது 
1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது 
1 டீஸ்பூன் சீரகம் 
4 டீஸ்பூன் மிளகுத்தூள் 
5 காய்ந்த மிளகாய் 
1 கப் கொத்தமல்லி இலை 
¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு தேவைக்கேற்ப 
எண்ணெய் தேவைக்கேற்ப
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

நன்றாக கிளறியதும், மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.

பிறகு மீன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

பிறகு அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். 

இப்பொழுது சுவையான மீன் மிளகு மசாலா தயார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு