சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Kanimoli
3 years ago
சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு இன்றையதினம் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நாவற்குழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இனப்படுகொலையாளியே வெளியேறு, தமிழர் தேசத்தில் புத்தர் கோயில் எதற்கு?  நிறுத்து நிறுத்து பௌத்த ஆக்கிரமிப்பை நிறுத்து, உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4