முடக்கத்தான் தோசை இப்படி செய்து பாருங்களேன்!

#Cooking #How_to_make
Mani
1 year ago
முடக்கத்தான் தோசை இப்படி செய்து பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி 2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
முடக்கத்தான் கீரை 3 கப்
உப்பு தேவைக்கேற்ப
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பூண்டு  3 பல்
சின்ன வெங்காயம் 5

செய்முறை:
இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

பின்னர்,  தோசைமாவு பதத்திற்கு  அரைத்து  இரவு முழுவதும்  புளிக்க விடவும். பின்னர், முடக்கத்தான் கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்துகொள்ளவும். 

அதனுடன்,  மிளகு, சீரகம்,  பூண்டு பல்,  சின்ன வெங்காயம்  சேர்த்து  அரைத்துக்கொள்ளவும். 

அரைத்த முடக்கத்தான்  விழுதை, தோசை மாவுடன் கலந்துகொள்ளவும்.  பின்னர் தேவையான  உப்பு  சேர்த்து  சூடான தோசைக்கல்லில் ஊற்றி மூடி வேக விடவும். 

பின்னர், திருப்பிப் போட்டும் சுடலாம். ஒரு சில சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!