WPL 2023: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ்

#IPL2023 #IPL #Sports News #sports
Mani
3 years ago
WPL 2023: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டரில் யுபி வாரியர்ஸை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 

புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் இன்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மோதின. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

183 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய கிரன் நவ்கிரே மட்டுமே நன்றாக ஆடி 27 பந்தில் 43 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொதப்ப, அந்த அணி வெறும் ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் டைட்டிலுக்கான ஃபைனலில் டெல்லி கேபிடள்ஸும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4