ஆந்ரா குண்டூர் கார சட்டினி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
15 பூண்டு
15 சின்ன வெங்காயம்
10 வர மிளகாய்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
2 tsp நல்லெண்ணெய்
1 tsp கடுகு கருவேப்பிள்ளை
செய்முறை:
முதலில் எடுத்து வைத்துள்ள பூண்டை கல்லில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும். பூண்டு இன்னும் அதிகமாக சேர்த்தால் சுவையும் அதிகமாக இருக்கும். அடுத்து சின்ன வெங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.
ஜாரில், ஊற வைத்த வரமிளகாயை சேர்த்து அதோடு எலுமிச்சை அளவு புலி, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும், அதோடு கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும், இடிச்சு வைத்த பூண்டை சேர்த்து நன்கு வதங்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
பூண்டும்,வெங்காயமும் நன்கு வதங்கிய பிறகு மிளகாய், புளி பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க எண்ணெய் எடுத்தால் ஆந்திர குண்டூர் காரச் சட்னி தயார்.