259 ரன்களை சேஸ் செய்து தென்னாப்பிரிக்க அணி சாதனை

#sports #Sports News #Australia #IPL2023 #2023
Mani
3 years ago
259 ரன்களை சேஸ் செய்து தென்னாப்பிரிக்க அணி சாதனை

டி20 போட்டியில் 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. டி20 போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்னாக இந்த போட்டி அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 ஆவது போட்டி சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கைல் மேயர்ஸ் – ஜான்சன் சார்லஸ் இணை தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்து. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறந்ததால் ரன் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மேயர்ஸ் 51 ரன்னில் வெளியேற 46 பந்துகளில் 11 சிக்சர் 10 பவுண்டரியுடன் சார்லஸ் 118 ரன்கள் குவித்தார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அடுத்து வந்த கேப்டன் பவெல் 28 ரன்களும், ரொமாரியோ ஷெபர்ட் 41 ரன்களும் எடுத்தனர். 20ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் குவின்டன் டி காக் 8 சிக்சர் 9 பவுண்டரியுடன் 100 ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 28 பந்தில் 68 ரன்கள் குவித்தார். ரிலீ ரூசோ 16, டேவிட் மில்லர் 10 ரன்கள் எடுக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் அதிரடியாக 38 ரன்கள் சேர்த்தார். மற்றொரு பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிக் கிளாசன் 16 ரன்கள் எடுக்க 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தென்னாப்பிரிக்க அணி 259 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4