மட்டன் கீமா வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்

#Cooking #Mutton #Recipe #How_to_make #சமையல்
Mani
11 months ago
மட்டன் கீமா வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

100 கிராம் மட்டன் 
2 1/2 tsp சீரகம் 
1 tsp மிளகு 
தேவையான அளவு உப்பு  
1/4 கப் பொட்டுக்கடலை மாவு 
தேவையான அளவு நல்லெண்ணெய்

செய்முறை:

முதலில் மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து டம்ளர் வைக்க வேண்டும்.

மட்டன் நன்கு வெந்த பின்னர், மட்டனில் தண்ணீர் அதிகம் இருந்தால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு வெந்த மட்டனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மாவை சேர்த்து வடை தாயும் பதத்திற்கு பிசைந்து சேர்த்து வைக்கவேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததம், அரைத்து வைத்துள்ள மட்டனை வடை போல் தட்டி, எண்ணெயில் மட்டனை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு