IPL2023: #CSKvsGT டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு.!

#IPL2023 #2023 #match
Mani
3 years ago
IPL2023: #CSKvsGT டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு.!

16- வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. முதலில் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

ஐபிஎல் தொடரின் துவக்க விழா 7 மணிக்கு  நடந்து முடிந்தது. இந்த துவக்கவிழாவில் நடிகை ராஷ்மிகா, தமன்னா ஆகியோர் நடனமாடினார்கள். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4