ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் ஸ்டஃப் பொரியல் எப்படி செய்வது?

#Recipe #Cooking #How_to_make
Mani
1 year ago
ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் ஸ்டஃப் பொரியல் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் :

கோவக்காய் - 500 கிராம்
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/4 tsp
கருவேப்பிலை - சிறிதளவு
சமையல் எண்ணெய் - 2 tbsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
தேவையான அளவு உப்பு

செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சூடேற எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கோவக்காயை நான்கு துண்டுகளாக கட் செய்து அதற்குள் அரைத்த ஸ்டஃபை வையுங்கள். இதை கால் மணி நேரம் ஊற வையுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் போட்டு தாளியுங்கள். பின் காய்ந்த மிளகாய் போடுங்கள்.

பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள். பின் ஊற வைத்த கோவக்காய் போட்டு வதக்குங்கள். அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள்.

நன்கு வதங்கியதும் பின் தண்ணீ கொஞ்சம் ஊற்றி 5 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி கொதிக்கவிடுங்கள்.

இறுதியாக காய் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறுங்கள்.