பழனி தண்டாயுதபாணி கோயிலில் இருந்து பங்குனி உத்திரம் தேர் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

#Murugan #God #Temple
Mani
2 years ago
பழனி தண்டாயுதபாணி கோயிலில் இருந்து பங்குனி உத்திரம் தேர் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று பங்குனி உத்திர திருவிழாவும், முருகப்பெருமான் தெய்வானையை மணந்த நாளில் பங்குனி உத்திர திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.அதன்படி, பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் தற்போது நடைபெற்று வருகிறது.

தேர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!