VEG - SANDWITCH யை வீட்டிலயே செய்து பாருங்கள்

#Recipe #Food #Tamil Food
Mani
1 year ago
VEG - SANDWITCH யை வீட்டிலயே செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்:

2 டீஸ்பூன் வெண்ணெய்
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
½ டீஸ்பூன் மிளகாய் நறுக்கியது
1 டீஸ்பூன் பாவ் பாஜ் மசாலா
½ டீஸ்பூன் சீரக பொடி
½ கப் கேரட்,குடைமிளகாய், பச்சை, மஞ்சள்
உப்பு தேவையான அளவு
2 உருளை கிழங்கு உப்பு போட்டு வேகவைத்து மசித்து
½ டீஸ்பூன் சாட் மசாலா
கொத்தமல்லி கொஞ்சம் நறுக்கியது

செய்முறை:

முதலில் ஒரு பானில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு அதில் பச்சை மிளகாய், மற்றும் தக்காளி சேர்த்து தக்காளி குழைய வதக்க வேண்டும்.

வதங்கியதும் அதில் மிளகாய் தூள், சீரக தூள், பாவ் பாஜ் மசாலா, சேர்த்து மசாலா வாசனை போக நன்கு வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து நறுக்கிய கேரட், குடை மிளகாய், சேர்த்து வேகும் அளவிற்கு வதங்கி வர வேண்டும். வெந்ததும் அடுப்பை நிறுத்தி சாட் மசாலா சேர்த்து கலந்துவிடவும்.

அடுத்து பிரட்டில் வெண்ணை இரு பக்கமும் தடவி செய்து வைத்துள்ள மசாலாவை ஸ்டப் பண்ணி தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிரட்டை போட்டு இரு பக்கமும் சேர்த்து போட்டு வேக விடவும். இப்பொழுது சுவையான வெஜ் சான்வெஜ் தயார்.