இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

#Newzealand #Srilanka Cricket #T20 #Tamilnews #Sports News #Lanka4
Prasu
3 years ago
இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2 வது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19 ஓவர்கள் நிறைவில் 141 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 35 ஓட்டங்களையும் தனஞ்சய சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் Adam Milne 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

142 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் Tim Seifert ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றார்.

3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4