தலைமன்னாரில் 92 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஸ் போதைப்பொருளுடன் மூன்று இந்தியர்கள் கைது

#Arrest #drugs #India #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
தலைமன்னாரில்  92 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஸ் போதைப்பொருளுடன்  மூன்று இந்தியர்கள் கைது

92 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற வெளிநாட்டுக் கப்பலுடன் இந்திய சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் மற்றும் வெலிப்பாறையை அண்டிய கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.

அந்த கப்பலில் 03 பைகளில் 92 கிலோ ஹசீஸ் பொதி செய்யப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ஹஷிஸ் போதைப்பொருளின் பெறுமதி 92 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

குறித்த போதைப்பொருள் கையிருப்புடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் தலைமன்னாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4