இலங்கையின் முன்னேற்றத்திற்கு உலக வங்கி பாராட்டு

#World Bank #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
3 years ago
இலங்கையின் முன்னேற்றத்திற்கு உலக வங்கி பாராட்டு

இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு உலக வங்கி பிரதிநிதிகள் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பாக உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடரின் இறுதிக் கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுதல், அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல், நலன்புரி நலன்கள் செலுத்தும் முறைமைகள், சமூகப் பதிவேடு மற்றும் அந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் தொடர்புடைய காலக்கெடுக்கள் போன்ற இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டு முன் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த படிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை நடவடிக்கைகளுக்கு உலக வங்கியின் பங்களிப்பை பாராட்டிய சாகல ரத்நாயக்க, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய எதிர்காலத்தில் அனைவரது ஆதரவையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் திருமதி சியோ காந்தா உட்பட உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4