புத்தாண்டு விழாவிற்கு சென்ற முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை

#Murder #Police #Crime #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
புத்தாண்டு விழாவிற்கு சென்ற முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை

இருபத்தைந்து வயதுடைய முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை இலுக்வத்த பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை முன்பள்ளியில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, ​​மயானம் ஒன்றிற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் ஆசிரியையின் கழுத்தை அறுத்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4